வழிபாடு

மகாலட்சுமியின் அருளைப் பெற துடைப்பம் தானம் செய்யுங்கள்

Published On 2025-10-18 16:25 IST   |   Update On 2025-10-18 16:25:00 IST
  • தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
  • கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.

தீபாவளி அன்று புத்தாடை, பட்டாசு, இறை வழிபாடு எவ்வளவு முக்கியமானதோ அதே அளவிற்கு முக்கியமானது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது.

பொதுவாக அக்ஷய திருதியை மற்றும் தீபாவளி போன்ற நன்னாளில் அவரவர் வசதிக்கேற்ப தங்கம் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் இப்போது தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கத்தை வாங்க முடியாது.

இந்த சூழலில் தங்கத்திற்கு பதிலாக கல் உப்பு, மஞ்சள்,குங்குமம், கண்ணாடி, மல்லிகைப்பூ முதலானவற்றை வாங்கினால் வருடம் முழுவதும் வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சம் நிறைவாக இருக்கும்.




எல்லாவற்றிற்கும் மேலாக தீபாவளியன்று துடைப்பம் வாங்குவது மிகவும் நல்லது. நல்ல நாளில் போய் துடைப்பம் வாங்குவதா என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். துடைப்பம் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது. அதனால் துடைப்பத்தை வாங்கி வீட்டில் ஏதேனும் ஓர் ஓரத்தில் வைத்தாலே மகாலட்சுமியின் அருள் நிறைந்து பண வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.

வாழ்வில் எப்போதும் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை என்பவர்கள் தீபாவளியன்று துடைப்பத்தை வாங்கி அதை யாருக்கேனும் தானமாக கொடுக்கலாம். இப்படி செய்தால் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை.

தீபாவளியன்று மாகாலட்சுமிக்கு லட்டு வைத்து வழிபட பணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

Tags:    

Similar News