நவராத்திரி ஸ்பெஷல்

நவராத்திரி 2ம் நாளில் செய்ய வேண்டிய பிரசாதம்..!

Published On 2025-09-23 09:00 IST   |   Update On 2025-09-23 09:01:00 IST
  • ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
  • ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்கள் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.

மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.

நவராத்திரியின் முதல் நாளில் கொலு வைத்து, துர்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகளும், மந்திரங்களாலும் வணங்கப்படுகிறது.

அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் படைக்கப்படுகிறது.

அதன்படி, நவராத்திரியின் இரண்டாவது நாளான இன்று பிரம்மச்சாரிணி தேவிக்கு படைக்க வேண்டிய சிவப்பு பட்டாணி சுண்டல், தக்காளி சாதம் மற்றும் கேரட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

சிவப்பு பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்:

* சிவப்பு பட்டாணி - 1 கப்

* சமையல் எண்ணெய் - 2 டீஸ்பூன்

* கடுகு - 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* பெருங்காயம்- ஒரு சிட்டிகை

* கறிவேப்பிலை - சிறிது

* பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2

* துருவிய தேங்காய் - 1/4 கப்

* உப்பு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

சிவப்பு பட்டாணியை சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறவைத்த பட்டாணியை உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

வேகவைத்த பட்டாணியை தாளித்ததில் சேர்த்து கிளறவும்.

கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து இறக்கவும்.

தக்காளி சாதம்:

நவராத்திரியின் போது படைப்பதற்கான தக்காளி சாதம் என்பது ஒரு சுலபமான கலப்பு சாதமாகும். தெய்வங்களுக்கு நைவேத்தியமாக வழங்கப்படுகிறது.

தேவையான பொருட்கள்:

*சமைத்த சாதம்

*தக்காளி

*நெய் அல்லது எண்ணெய்

*கடுகு

*உளுந்து

*கடலைப்பருப்பு

*சீரகம்

*மிளகு

*பச்சை மிளகாய்

*இஞ்சி

*பூண்டு

*மஞ்சள் தூள்

*மிளகாய் தூள்,

*கொத்தமல்லி தூள்

*கரம் மசாலா அல்லது சாம்பார் மசாலா

*கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகள்

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெயில் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய அல்லது அரைத்த தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, மற்றும் மசாலாப் பொடிகளை சேர்க்கவும்.

தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை சமைக்கவும். சமைத்த சாதத்தை சேர்த்து, நெய் ஊற்றி நன்றாக கலக்கவும்.

தக்காளி சாதத்தை நன்றாக கிளறி, நவராத்திரி நிவேதனமாக படைக்கவும்.

கேரட் அல்வா:

தேவையான பொருட்கள்:

காரட் – ½ கிலோ (துருவியது)

பால் – ½ லிட்டர்

சர்க்கரை – 1 கப் (தேவைக்கேற்ப)

நெய் – 3 டேபிள்ஸ்பூன்

முந்திரி – 8-10 (நறுக்கியது)

ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

 செய்முறை:

* காரட்டை நன்றாக கழுவி தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

* ஒரு கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

* துருவிய காரட்டை பாலில் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

* காரட் மெலிந்து பால் சுருங்கும் வரை நன்றாகக் கிளறிக் கொண்டே இருக்கவும்.

* இப்போது சர்க்கரை சேர்த்து, கலந்து, கெட்டியான நிலைக்கு வரும் வரை சமைக்கவும்.

* தனியே ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி வறுத்து சேர்க்கவும்.

* ஏலக்காய் பொடி தூவி நன்றாகக் கலக்கவும். நெய் ஒட்டும் தன்மை வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல் கேரட் அல்வா தயார்.

Tags:    

Similar News