புதுச்சேரி

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கட்டியணைத்த வாலிபர்- போலீஸ் வலைவீச்சு

Published On 2023-02-19 13:28 IST   |   Update On 2023-02-19 13:28:00 IST
  • தேவநாதன் பின்பக்கமாக சென்று பெண்ணை கட்டியணைத்துள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.

மதகடிப்பட்டு:

புதுவை அருகே தமிழக பகுதியான கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண். கணவரை இழந்த இவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

அவருக்கு கணவரின் சகோதரர் உதவி செய்து வந்தார். இதற்கிடையே கணவரின் சகோதரரை சந்திக்க அவரது நண்பரான எம்.என்.குப்பத்தை சேர்ந்த தேவநாதன்(27) என்பவர் அடிக்கடி வருவார்.

அப்போது நண்பரின் தம்பி மனைவியை தவறான கண்ணோட்டத்தில் தேவநாதன் பார்த்து வந்தார். ஒருமுறை அந்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு தேவநாதன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பெண் சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் தேவநாதன் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்த பெண் தனது கணவரின் சகோதரர் இங்கு இல்லை என தெரிவித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமையல் செய்து கொண்டிருந்தார்.

அப்போது தேவநாதன் பின்பக்கமாக சென்று அந்த பெண்ணை கட்டியணைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். இதையடுத்து தேவநாதன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேவநாதனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News