புதுச்சேரி

புதுவையில் இடிந்து விழுந்து 12 ஆண்டாகியும் கோவில் கட்டாத திருப்பதி தேவஸ்தானம்- பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-05-09 15:06 IST   |   Update On 2023-05-09 15:06:00 IST
  • திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது.
  • புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

புதுச்சேரி:

புதுவை நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

இந்த கோவில் 12 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த திருப்பதி தேவஸ்தான கோவிலை மீண்டும்

கட்டக்கோரி, புதுவை மக்கள் தேவஸ்தானத்திடம் பலமுறை புகார் செய்தனர். இதுவரையில் புதிதாக கோவில் கட்டப்படவில்லை.

புதிய கோவில் கட்ட வலியுறுத்தி புதுவை ஆன்மீக சபைகள், பாகவதர்கள், பொதுமக்கள், திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி ஆகியவை சார்பில் தேவஸ்தான சேர்மன், நிர்வாக அதிகாரிகள், புதுவை முதலமைச்சர், ஆந்திர கவர்னர் மற்றும் ஆந்திர அரசிடமும் கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது. பழைய கோவில்களை புதுப்பித்து வருகிறது. ஆனால் புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசை கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பில் புதுவை திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் பாலாஜி பாகவதர்கள், ஆன்மீக மன்றங்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News