செய்திகள்
கேன் வில்லியம்சன் 67 ரன்னில் அவுட்: ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இந்தியா
மான்செஸ்டர் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 67 ரன்னில் ஆட்டமிழந்ததால், இந்திய பந்து வீச்சாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் மார்ட்டின் கப்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்ததும் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த நிலையில், கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
அவர் தொடர்ந்து விளையாடினால் நியூசிலாந்தின் ஸ்கோர் 250 ரன்களை தாண்டும் என்ற நிலை இருந்தது. அந்த நிலையில் சாஹல் வீசிய 36-வது ஓவரின் 2-வது பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழக்கும்போது நியூசிலாந்து 134 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அவர் சதம் அடித்திருந்தால் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்திருக்கும்.