உலகம்

இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிப்பு

Published On 2025-05-26 07:31 IST   |   Update On 2025-05-26 07:31:00 IST
  • சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
  • தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News