உலகம்

பாராசிட்டமாலால் ஆட்டிசம் நோய் அபாயமா? டிரம்பின் குற்றச்சாட்டுக்கு உலக சுகாதார மையம் விளக்கம்

Published On 2025-09-23 18:58 IST   |   Update On 2025-09-23 18:58:00 IST
  • பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும்.
  • மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம்.

பாராசிட்டமால் மாத்திரையை எடுக்காதீர்கள். எவ்வளவு முடியுமோ தவிர்க்க வேண்டும். மிகுந்த அவசரம் என்றால்தான் எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாராசிட்டமால் எடுத்துக் கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் அல்லது அதிக கவன சிதறல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டை உலக சுகாதார மையம் மறுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளக்க அறிக்கயைில் "அமெரிக்க அதிபர் டிரம்பின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பான சில மருந்துகளில் பாராசிட்டமால் முக்கியமானது. காய்ச்சல் மற்றும் வலி குறைக்க இது அவசியம். உலகளவில் கர்ப்பிணிப் பெண்களில் சுமார் 50% பேர் பாராசிட்டமால் பயன்படுத்துவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. பல நாடுகளில் இது பல பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

காய்ச்சல் கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். அதனால், டாக்டர்கள் பாராசிட்டமாலை பாதுகாப்பான தேர்வாகக் கருதுகின்றனர்.

Tags:    

Similar News