உலகம்

VIDEO: திடீரென ஒலித்த Fire Alarm.. பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்

Published On 2025-07-06 02:15 IST   |   Update On 2025-07-06 02:16:00 IST
  • புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.
  • அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.

ஸ்பெயினில் ஒரு விமானம் புறம்படும் நேரத்தில் தீ எச்சரிக்கை ஒலித்ததால் பயணிகள் தங்கள் உயிரைக் காப்பாற்ற விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர்.

இன்று, ஸ்பெயினில் உள்ள பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்திலிருந்து மான்செஸ்டருக்கு புறப்படத் தயாராக இருந்தபோது ரயானேர் போயிங் 737 விமானம் இந்த சம்பவம் நடந்தது.

புறப்படும் போது திடீரென தீ எச்சரிக்கை ஒலித்தது, இதனால் பயணிகள் பீதியில் அலறினர். உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு குழுவினர், அவசர கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியைத் தொடங்கினர்.

இருப்பினும், சில பயணிகள், குழுவினரின் அறிவுறுத்தல்களைக் கேட்காமல், பயத்தில் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து குதித்தனர். இதன்போது சுமார் 18 பேர் சிறு காயங்களுக்கு ஆளானார்கள். சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தீ எச்சரிக்கை ஒலித்ததாகவும், எந்த ஆபத்தும் இல்லை என்றும் விமான நிறுவனம் விளக்கம் அளித்தது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News