உலகம்

ஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு

Published On 2026-03-01 01:13 IST   |   Update On 2026-03-01 01:13:00 IST
  • அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
  • ஈரான் பள்ளிமீது நடத்திய வான்வழித் தாக்குதலில் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

டெஹ்ரான்:

பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது எனக்கூறி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

மினாப் நகரில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளம் அமைந்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகியவை இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின.

ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் பெண்கள் தொடக்கப்பள்ளி மீது இஸ்ரேல் - அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் முதல் கட்டமாக 40 மாணவிகள் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனம் உறுதிசெய்தது.

இந்நிலையில், இந்தக் கொடூர தாக்குதலில் பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பள்ளி மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான செயல் என ஈரான் அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News