உலகம்

VIDEO: என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?.. கனடாவில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்

Published On 2025-11-05 03:18 IST   |   Update On 2025-11-05 03:18:00 IST
  • மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் நின்றிருந்தபோது காரணமின்றி தாக்கினார்.
  • இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளி, "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று கேட்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் இந்தியர்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள ஒரு மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மொபைல் ஆர்டர் பிக்கப் கவுண்டரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் மீது நபர் ஒருவர் காரணமின்றி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவில், இளைஞரை, போதையில் இருப்பது போல் தோன்றும் அந்த நபர் எவ்வித காரணமுமின்றி தள்ளிவிடுகிறார். இதனால் இளைஞரின் கைபேசி கீழே விழுந்தது.

இளைஞர் அமைதியாகத் தன் கைபேசியை எடுத்தபோது, ஆத்திரமடைந்த அந்த நபர் இளைஞரின் காலரைப் பிடித்து சுவரோடு தள்ளுகிறார். "நீ என் முன்னால் பெரிய ஆள் போல் காட்டிக்கொள்கிறாயா?" என்று அவர் இளைஞரிடம் கேட்பது பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News