உலகம்
குவைத் நாட்டில் போதைப்பொருள் வழக்கில் 2 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு
- அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.
- ர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
குவைத் நீதிமன்றம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க குவைத் உள்துறை அமைச்சகம் சமீபத்தில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைஃபான் மற்றும் ஷுவாய்க் பகுதிகளில் கண்காணிப்பு நடத்தி இரண்டு இந்தியர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 14 கிலோ ஹெராயின் மற்றும் 8 கிலோ மெத்தம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.