உலகம்

ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம், உரங்கள் இறக்குமதி செய்வது தொடர்பான கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில்...

Published On 2025-08-06 09:56 IST   |   Update On 2025-08-06 09:56:00 IST
  • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய டிரம்ப் ஆட்சேபனை.
  • அமெரிக்கா யுரேனியம் இறக்குமதி செய்கிறதே? என்ற கேள்விக்கு, அது பற்றி தெரியாது என நழுவல்.

ரஷியா- உக்ரைன் இடையிலான போர் 3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் புதின் போரை நிறுத்த விரும்பவில்லை.

இதனால் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளிடம், எண்ணெய் வாங்கக் கூடாது என எச்சரித்து வருகிறார். அப்படி வாங்கினால் அந்த நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

அனால் இந்தியா மற்றும் சீனா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தமாட்டோம் எனத் தெரிவித்துள்ளன. இந்தியா அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்த டிரம்ப், கூடுதலாக கணிசமான வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இன்று வெளியாகலாம்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம், மற்ற நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என வலியுறத்துகிறீர்கள். ஆனால் அமெரிக்கா யுரேனியம், உரங்களை ரஷியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறதே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டொனால்டு டிரம்ப் "அது பற்றி ஏதும் எனக்குத் தெரியாது. அதை நான் சரிபார்க்க வேண்டும்" எனத் பதில் அளித்தார்.

Tags:    

Similar News