உலகம்

வர்த்தக ஒப்பந்தம் மூலம் சீனாவிடம் இருந்து அரிய கனிமங்களை அமெரிக்கா பெறும்: டொனால்டு டிரம்ப்

Published On 2025-06-11 19:39 IST   |   Update On 2025-06-11 19:39:00 IST
  • அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை.
  • சீன மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழங்களில் படிக்க அனுமதி டிரம்ப் ஒப்புதல்.

அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும் டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும் என எச்சரித்தார். இல்லையெனில் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்ததோடு, கடந்த ஏப்ரல் மாதம் அமல்படுத்தினார்.

இதனால் வரத்தக போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. பெரும்பாலான நாடுகள் கேட்டுக்கொண்டதன் மூலம் பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைத்தார். ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்ததால் இரு நாடுகளும் மேலும் மேலும் வரியை உயர்த்தின.

இதற்கிடையே கடந்த வாரம் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் டெலிபோனில் பேசினார். பின்னர் வர்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாட்டின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத்தெரிவித்தார்.

இந்த நிலையில் வர்த்தக ஒப்பந்தத்தில் சீனாவிடம் இருந்து காந்தம் மற்றும் அரிய கனிமங்களை அமெரிக்கா பெறும். சீன பொருட்களுக்கு 55 சதவீதம் வரி விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, சீன மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிப்பது உட்பட ஒப்புக்கொண்டதை சீனாவிற்கு அமெரிக்கா வழங்கும் என்றார்.

Tags:    

Similar News