உலகம்

காசாவில் தொடரும் துயரம்.. 'பைரன்' புயல் பாதிப்பால் 14 பேர் பலி.. குழந்தைகள் குளிரில் உயிரிழக்கும் அவலம்

Published On 2025-12-13 17:50 IST   |   Update On 2025-12-13 17:50:00 IST
  • முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.
  • பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்த பாலஸ்தீன நகரமான காசாவில் 'பைரன்' புயல் பாதிப்பால் 14 பேர் உயிரிழந்தனர்.

புயலில் நான்கு பேர் இறந்த நிலையில் புயலை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக கூடாரம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் இறந்தனர். போரில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் சுவர் கூடாரத்தின் மீது விழுந்ததில் இரண்டு பேர் இறந்தனர்.

கடுமையான குளிரால் உறைந்து சில குழந்தைகளும் இறந்தனர். முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.

வரும் நாட்களில் காசாவில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

போரில் வீடுகள் அழிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தற்போது தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் கூடாரங்கள் தொடர்ந்து இடிந்து விழுகின்றன. மக்கள் குளிர் மற்றும் கனமழையில் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த உபகரணங்கள் காரணமாக வெள்ளம் மற்றும் குளிரை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை என்று உள்ளூர் நிர்வாகம் கூறியுள்ளது.   

Tags:    

Similar News