உலகம்

ரஷிய அதிபர் புதினுடன் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்

null

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுடனான உறவை முறித்த ரஷியாவின் நட்பு நாடு

Published On 2022-07-08 07:29 GMT   |   Update On 2022-08-01 09:37 GMT
  • உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5வது மாதமாக நீடிக்கிறது.
  • உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞரை அதிபர் ஜெலன்ஸ்கி நீக்கினார்.


2022-08-01 09:37 GMT

உக்ரைனின் நிகோபோல் நகரம் மீது ரஷியா படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தின. 50 ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதால் ஒருவர் காயமடைந்தாகவும், வீடுகள், எரிவாயு மற்றும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்தது என்றும். அப்பகுதி கவர்னர் வாலன்டின் ரெஸ்னிசென்கோ தெரிவித்துள்ளார்.

2022-08-01 09:36 GMT

ரஷிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட செவஸ்டோபோல் பகுதியில் உள்ள கடற்படை தளத்தை ஆளில்லா விமானம் தாக்கியது. இந்த தாக்குதலில் ஐந்து ரஷிய கடற்படை ஊழியர்கள் காயமடைந்தனர் என்று கிரிமியன் துறைமுக நகர ஆளுநர் மிகைல் ரஸ்வோசாயேவ் தெரிவித்தார். 

2022-07-26 01:32 GMT

உக்ரைன் அணுமின் நிலைய ஊழியர்களில் சுமார் 100 பேரை ரஷியப் படைகள் கடத்தியதாக உக்ரைன் அணுமின் நிலைய நிறுவன தலைவர் எனர்கோடாமின் பெட்ரோ கோடின் தெரிவித்துள்ளார். ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலைய பகுதியில் சுமார் 500 ரஷிய வீரர்கள் உள்ளதாகவும், அவர்கள்தான் ஊழியர்களை பணி நிலையங்களுக்குள் அனுமதிக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-07-24 01:10 GMT

ஒப்பந்தத்திற்குப் பிறகு உக்ரைன் துறைமுகத்தின் மீதான தாக்குதல்களை ரஷியா மறுத்ததாக , துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர் தெரிவித்துள்ளார். எங்கள் தொடர்பில் உள்ள ரஷியர்கள் இந்த தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் முற்றிலும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளதாகவும் அகர் குறிப்பிட்டுள்ளார்.

2022-07-24 01:09 GMT

தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் உக்ரைனும், ரஷியாவும் கையெழுத்திட்ட நிலையில் ஒடேசா துறைமுகம் மீதான ரஷிய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்பட துருக்கி அறிவுறுத்தி உள்ளது.

2022-07-24 01:07 GMT

தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசா மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாகவும், மேலும் இரண்டு ஏவுகணைகள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் சேர்கி ப்ராட்சுக் தெரிவித்துள்ளார்.

2022-07-23 01:25 GMT

கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ரஷியா, உக்ரைன் நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டானியோ குட்டரெஸ் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுதாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் உணவுப் பாதுகாப்பு தொடர்பாக நிலவி வந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

2022-07-23 01:24 GMT

ரஷிய படைகளுடனான போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா 27 மில்லியன் அமெரிக்க டாலர் ராணுவ உதவி வழங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி வெளியிட்டுள்ளார்.


2022-07-21 00:49 GMT

ரஷிய படைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உக்ரைனில் விவசாயம் செய்ய மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தொடர்பாக உக்ரைன் முன்னாள் தூதர் அலெக்சாண்டர் ஷேர்பா வீடியோ ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், தீப்பிடித்த விளைச்சல் பகுதியை தண்ணீர் மூலம் விவசாயி ஒருவர் அணைக்கிறார். அதை மற்ற பகுதிகளுக்கு பரவ விடாமல் மற்றொரு விவசாயி தடுக்கிறார்.

உக்ரைனில் விவசாயிகள் ஷெல் தாக்குதலுக்கு மத்தியில் தங்கள் பயிர்களைக் காத்து அறுவடையை உறுதிசெய்ய முயல்கின்றனர் என அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

2022-07-20 20:34 GMT

ரஷிய வர்த்தகத்துறை அதிகாரிகள் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களில் ரஷியாவில் 140 நிறுவனங்கள் சேவைகளை நிறுத்தியுள்ளன. பங்குதாரர்களின் அழுத்தம் மற்றும் பொதுக் கருத்தின் அடிப்படையில் அந்த நிறுவனங்கள் இத்தகைய முடிவுகளை எடுக்கின்றன. சில நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை விற்றுவிட்டன. மேலும் சில நிறுவனங்கள் தங்கள் கிளைகளை மூடிவிட்டன என தெரிவித்துள்ளனர்.

Similar News