உலகம்

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

Published On 2022-06-05 17:08 IST   |   Update On 2022-06-23 06:11:00 IST
2022-06-06 22:42 GMT

உக்ரைன் போரில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷியாவை, அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு வலியுறுத்தி உள்ளன. அல்பேனியாவால் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தின் போது இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கற்பழிப்பு, வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களை நிறுத்துவது ரஷ்யாவிடம் உள்ளது என்றும், உக்ரைன் மக்கள் மீதான மனசாட்சியற்ற போரை முடிவுக்கு கொண்டு வருவதும் ரஷியாவிடம் உள்ளது என்றும். அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தினரின் கொடூர செயல்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மைக்கேல் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு, ரஷிய அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

2022-06-06 15:19 GMT

செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ் உக்ரைனுக்குச் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன். மனித குலத்தை அழிவிற்கு அழைத்துச் செல்லாதீர்கள். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உண்மையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். போருக்கான தீர்வை எட்டுவதற்கு தலைவர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

2022-06-06 13:20 GMT

சிவிரோடோனெட்ஸ்க் நகரைச் சுற்றியுள்ள பொதுமக்களின் குடியிருப்புகள் மீது ரஷியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வடக்கே கார்கீவ் பிராந்தியம் மற்றும் மேற்கில் ஸ்லோவியன்ஸ்க் நகரை சுற்றி தாக்குதல் நடத்தி, நகரைக் கைப்பற்ற ரஷியா முன்னோக்கி நகர்வதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. ஆனால், பொதுமக்கள் மீது குறிவைத்ததாக கூறும் குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.

2022-06-06 11:59 GMT

ரஷியாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், செர்பியாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அண்டை நாடுகள் தங்கள் வான் பகுதி வழியாக அவரது விமானம் பறக்க தடை விதித்தது எனவே, அவர் தனது செர்பிய பணத்தை ரத்து செய்துள்ளார்.

2022-06-06 11:56 GMT

கீவில் உக்ரைன் ரெயில்வே உள்கட்டமைப்புகள் மீது ரஷியா ஷெல் குண்டுகளை வீசி தாக்கி அழித்துள்ளது. ஏப்ரல் 28ம் தேதிக்குப் பிறகு தலைநகரில் ரஷியா இதுபோன்று ஷெல் தாக்குதல்களை நடத்தி உள்ளது.

2022-06-06 10:25 GMT

போரினால் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், ரஷியா தனது அமெரிக்க தூதரகத்தை மூடக்கூடாது என்றும், உலகின் இரண்டு பெரிய அணுசக்தி நாடுகள் தொடர்ந்து பேச வேண்டும் என்றும் ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் கூறி உள்ளார்.

2022-06-05 23:24 GMT

கிழக்கு உக்ரைனின் லிசிசான்ஸ்க் மீது ரஷியப் படைகள் தாக்கியதை அடுத்து, அங்கிருந்த 98 பேரை காவல்துறையினர், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் உக்ரைனின் மாநில அவசர சேவை பிரிவினர் வெளியேற்றியதாக, லுஹான்ஸ்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

2022-06-05 23:23 GMT

உக்ரைனின் செவெரோடோனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலைக்கு அடியில் அமைந்துள்ள பல தங்குமிடங்களில் சுமார் 800 பேர் மறைந்துள்ளதாக லுஹான்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாக தலைவர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். அங்கு உள்ளூர்வாசிகள் உள்ளதாகவும், அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்து வெளியேற அவர்கள் மறுத்துவிட்டதாகவும், அங்கு குழந்தைகளும் இருப்பதாகவும் செர்ஹி குறிப்பிட்டுள்ளார்.

2022-06-05 23:17 GMT

ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின், செர்பியா பயணம், ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். செர்பியாவைச் சுற்றியுள்ள நாடுகள் செர்ஜி லாவ்ரோ பயணம் செய்யும் விமானம் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்ததை அடுத்து, அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் ரஷிய தூதரக அதிகாரியை பெல்கிரேடுக்கு ஏற்றிச் செல்லும் விமானம் பறக்க தடை விதிக்கும் நடவடிக்கையாக பல்கேரியா, வடக்கு மாசிடோனியா மற்றும் மாண்டினீக்ரோ ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடிவிட்டதாக செர்பிய ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

2022-06-05 22:32 GMT

கிழக்கு உக்ரைனில் ரஷிய ராணுவ ஜெனரல் ரோமன் குடுசோவ் கொல்லப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடக பத்திரிக்கையாளர் அலெக்சாண்டர் ஸ்லாட்கோவ் தெரிவித்துள்ளார். எனினும் ஜெனரல் ரோமன் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்பது குறித்து முழு விபரத்தை அவர் வெளியிடவில்லை. ராணுவ ஜெனரல் உயிரிழப்பு குறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்தும் உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Similar News