உலகம்

உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல்

Published On 2025-07-07 19:38 IST   |   Update On 2025-07-07 19:38:00 IST
  • கடந்த வாரம் 1270-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல்.
  • கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. கடந்த 24 மணி நேர தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயம் அடைந்துள்ளனர். 100-க்கும் அதிகமான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷியா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது அதிதீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 1270 டிரோன்கள், 39 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் எல்லையில் சில இடங்களில் (Front Line) ஆயிரம் கி.மீ. அளவிற்கு ஊடுருவ ரஷியா ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அதை கடுமையாக தடுத்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டணிகள் மற்றும் முன்னணி அமெரிக்கா பாதுகாப்பு நிறுவனத்துடன் டிரோன்கள் தயாரிக்க உக்ரைன் கடந்த சனிக்கிழமை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், வான் பாதுகாப்பு உயிர்களை காப்பாற்க முக்கியமான விசயம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News