பாகிஸ்தானில் இந்தோனேசிய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
- ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.
- பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ 2 நாள் பயணமாக இன்றுபாகிஸ்தான் சென்றுள்ளார்.
நூர் கான் விமான தளத்தில் வந்திறங்கிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் வரவேற்றனர். பிரபோவோவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிபர் சுபியான்டோவுடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவும் வருகை தந்துள்ளது.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அதிபர் பிரபோவோ சுபியான்டோ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனிடையே, ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு அப்போதைய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பாகிஸ்தானுக்கு வருகை தந்திருந்தார். கடந்த ஜூலை மாதம், இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சரும் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்து பாதுகாப்புதுறையில் உற்பத்தி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.