உலகம்

ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களை சந்தித்தார் பிரதமர் மோடி

Published On 2025-11-23 01:51 IST   |   Update On 2025-11-23 01:51:00 IST
  • ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.
  • அமெரிக்க அதிபர் டிரம்ப்​, ரஷிய அதிபர் புதின்​ ஆகியோர் இதில் பங்​கேற்​க​வில்​லை.

ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.

ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேசினார்.

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்ஜி ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

Tags:    

Similar News