உலகம்

AI-ஆல் தொடரும் பணி நீக்கம்- சுமார் 600 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது Meta நிறுவனம்

Published On 2025-10-24 11:45 IST   |   Update On 2025-10-24 11:45:00 IST
  • இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தியது.
  • ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர்.

இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பதால் நன்மை ஏற்பட்டாலும், பெரும்பாலும் தீங்காகவே அமைகிறது. அந்த வகையில், AI தொழில் நுட்பம் வந்த பிறகு பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் AI பிரிவு தலைமை அதிகாரி அலெக்சாண்டர் வாங் தெரிவித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் AI உள்கட்டமைப்பு அலகுகள், அடிப்படை செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி பிரிவு (FAIR) மற்றும் பிற தயாரிப்பு தொடர்பான பதவிகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்தாண்டு தொடக்கத்தில் AI பிரிவில் புதிதாக 50 பேரை பணிக்கு அமர்த்தி, ஏற்கனவே வருடக் கணக்கில் வேலை செய்து வந்தவர்களை பணிநீக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News