உலகம்
சூடானில் நிலச்சரிவால் புதைந்த கிராமம்: 1000 பேர் உயிரிழப்பு - ஒரே ஒருவர் உயிர்பிழைத்த அதிசயம்
- நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது.
- நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார்.
சூடான் நாட்டின் டார்பர் மலைப்பகுதியில் கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கி 1,000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரு முழு கிராமமே மண்ணில் புதைந்து சிதைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் இருந்து ஒரே ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில மக்கள் அப்பகுதியில் தஞ்சம் அடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.