உலகம்

வனுவாட்டு குடியுரிமை பெற்ற லலித் மோடி, இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைத்தார்

Published On 2025-03-08 12:02 IST   |   Update On 2025-03-08 12:02:00 IST
  • லலித் மோடி 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார்.
  • லித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மீது முறைகேடு புகார் எழுந்தது. இதையடுத்து, கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். தற்போது லலித் மோடி, லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லலித் மோடி, "என்மீது எந்த கோர்ட்டிலும் வழக்குகள் இல்லை. சட்டப் பிரச்சனையும் இல்லை. அப்படி இருந்தால், தயவுசெய்து அதை சமர்ப்பிக்கவும். இருப்பினும், நான் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன். காரணம், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 'மேட்ச் பிக்ஸ்' செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால் எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லலித் மோடி ஆஸ்திரேலியாவுக்கு அருகே தெற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டு குடியுரிமையை பெற்றுள்ளார். இதனையடுத்து, தனது இந்திய பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அவர் விண்ணப்பித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News