காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் வான்தாக்குதல்: 8 பேர் உயிரிழப்பு
- கான் யூனிஸில் உள்ள மருத்துவமனையின் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
- கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
தெற்கு காசாவில் உள்ள முக்கியமான மருத்துவமனையின் 4ஆவது மாடி மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக, காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நான்காவது மாடியின் மீது இரண்டு முறை வான்குதாக்குதல் நடத்தியுள்ளது. முதன்முறையாக தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனை பலத்த சேதம் ஏற்பட்டது. மீட்புக்குழு மீட்புப் பணிக்காக வந்த நிலையில், மற்றொருமுறை வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை இதுவாகும். கடந்த 22 மாதங்களாக நடைபெறும் தாக்குதல் காரணமாக மருத்துவனைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியவில்லை. ஸ்டாஃப் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இஸ்ரேல் இது தொடர்பாக உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. காசா முனையில் உள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. அதேவேளையில் தாக்குதலும் நடத்தி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று கொல்லப்பட்ட நிலையில், 10 பேர் காயம் அடைந்தனர். அப்போது, மருத்துவமனைக்குள் ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் 62,686 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.