உலகம்

இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி தளங்களை தாக்கி அழிக்க தயாராக உள்ளோம் - ஈரான் பரபரப்பு எச்சரிக்கை

Published On 2025-06-11 03:01 IST   |   Update On 2025-06-11 03:01:00 IST
  • ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி நிலையங்களை உடனடியாக குறிவைப்போம் என்று ஈரானின் ஆயுதப் படைகள் எச்சரித்துள்ளன.

இதற்காக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) சமீபத்தில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிடமிருந்து முக்கியமான உளவுத்துறைத் தகவல்களை பெற்றுள்ளதாக ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

உளவுத்துறை ஆதாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் இஸ்ரேலில் உள்ள ரகசிய அணுசக்தி தளங்களை உள்ளிட்ட முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக SNSC தெரிவித்துள்ளது.

ஈரானிய நலன்களுக்கு எதிராக இஸ்ரேல் ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்த இலக்குகள் மீது பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த அதன் ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக பலர் நம்பினாலும், அந்த நாடு இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. 

Tags:    

Similar News