உலகம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை- வாலிபர் கைது

Published On 2025-09-21 17:54 IST   |   Update On 2025-09-21 17:54:00 IST
  • பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
  • இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் (49) என்பவர் பெட்ரோல் பங்கை நிர்வகித்து வந்தார். இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.

அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை எறிந்து விட்டு கிரண் படேல் தப்பி ஓடினார். அப்போது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் கிரண் பட்டேல் உயிரிழந்தார்.

உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் இந்திய பெண்ணை சுட்டு கொன்றது ஜேடன் மேக் ஹில்(வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News