உலகம்

முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை.. உக்ரைன் போருக்கு சவூதி அரேபியாவில் தீர்வு கிடைக்குமா?

Published On 2026-01-23 07:50 IST   |   Update On 2026-01-23 07:50:00 IST
  • உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது
  • இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.

நேட்டோ நாடுகளுடன் சேர முயற்சித்த உக்ரைனால் தங்களுக்கு ஆபத்து என கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

தீர்வு எட்டப்படாமல் நான்கு ஆண்டுகளை கடந்து உக்ரைன் -ரஷியா போர் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றத்துமுதல் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் போரை நிறுத்த பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அமெரிக்காவின் அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை கடந்த ஆகஸ்டில் சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே கடந்த ஜனவரி 19 முதல் சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வரும் நிலையில் நேற்று இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.

அங்கு வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து ஜெலன்ஸ்கி போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதல் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

இதன்படி, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய மூன்று நாடுகளும் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

முன்னதாக மாநாட்டில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன் ஒரு முடிவில்லாத சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளது என்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, போரை நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் சாடினார்.

மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது என்றும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் மிக நெருக்கத்தில் இருப்பதாக டிரம்ப கூறியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்காவின் சிறப்புத் தூதர்கள் இருவர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கு மத்தியில் உக்ரைனின் தென்கிழக்குப் பகுதிகளில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

Tags:    

Similar News