அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரிவிதித்த மெக்சிகோ
- உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
- 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு மெக்சிகோவின் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவைத் தவிர, சீனா உட்பட பல ஆசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் உள்ளன. உயர்த்தப்பட்ட வரி ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
வாகனங்கள், வாகன பாகங்கள், ஆடைகள், பிளாஸ்டிக், எஃகு போன்றவற்றின் மீதான இறக்குமதி வரிகள் 50 சதவீதம் அதிகரிக்க உள்ளது. இந்த வரிகள் சீனா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளை அதிகம் பாதிக்கும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் அடுத்த ஆண்டு கூடுதலாக 33,910 கோடி டாலர் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த வரி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
50 சதவீத வரி இந்தியா - மெக்சிகோ இடையிலான வர்த்தக உறவுகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில், இரு நாடுகளும் 11.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தகத்தை மேற்கொண்டன.
அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து மெக்சிகோவிற்கு ஏற்றுமதி 8.9 பில்லியன் டாலர்களாக இருந்தது. அதே நேரத்தில் இந்தியாவிற்கான இறக்குமதி 2.8 பில்லியன் டாலர்களாக இருந்தது. இந்தியா மெக்சிகோவின் ஏற்றுமதியாளர்களில் ஒன்பதாவது பெரிய நாடாகும்.