உலகம்

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

Published On 2023-05-29 02:19 GMT   |   Update On 2023-05-29 02:19 GMT
  • அ.தி.மு.க. இப்போது 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது.
  • அன்றைய பா.ஜ.க.வுக்கும், இன்றைய பா.ஜ.க.வுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

சிங்கப்பூர் :

சிங்கப்பூரில் உள்ள தமிழ் நாளிதழுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அ.தி.மு.க. இப்போது 4 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. அவர்களது பலவீனத்தை நாங்கள் அரசியல் செய்வதில்லை. எங்களது கொள்கைகளையும், தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் இருப்போம். கருணாநிதி காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பா.ஜ.க. உடன் தி.மு.க. கூட்டணி சேர வாய்ப்பு இல்லை. வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பா.ஜ.க.வுக்கும், இன்றைய பா.ஜ.க.வுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடு பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியதுபோல, இந்த முறையும் அதற்கான திட்டம் உண்டு. அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags:    

Similar News