உலகம்

தாய்லாந்தில் வினோதம்: போலீசாரை தாக்கிய பூனை கைது... ஜாமினில் எடுத்த உரிமையாளர்

Published On 2025-05-24 07:56 IST   |   Update On 2025-05-24 07:56:00 IST
  • பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
  • அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பூனை ஒன்று காணாமல் போனதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் நுப் டாங் என்ற அந்த பூனையை போலீசார் கண்டுபிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பூனையுடன் போலீசார் கொஞ்சி விளையாடினர். அப்போது அந்த பூனை போலீசாரை தனது நகத்தால் கீறியது. இதனையடுத்து நடைபெற்ற சம்பவங்கள் தான் வினோதமானது.

அதாவது மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களை தாக்கியதாக கூறி அந்த பூனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பூனையின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையம் சென்றனர். அவர்களிடம் பூனையை ஒப்படைக்கும் முன்னர் போலியாக ஒரு எப்.ஐ.ஆர். பதிந்து பூனையை கைது செய்வதுபோல் நடித்தனர்.

குற்றவாளியின் இடத்தில் பூனையும், அதற்கு ஜாமின் பெறுவது போல் உரிமையாளர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதனை புகைப்படம் எடுத்த போலீசார் சமூகவலைதளத்தில் பதிவிட அது வைரலாகி லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்றுள்ளது.

Tags:    

Similar News