உலகம்

இலவசமாக தருவதை வேண்டாம் என்று சொல்ல நான் முட்டாளா?.. கத்தார் வழங்கும் சொகுசு விமானத்தை ஏற்கிறார் டிரம்ப்

Published On 2025-05-14 04:16 IST   |   Update On 2025-05-14 04:23:00 IST
  • ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார்.
  • அப்படிப்பட்ட சலுகையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன்.

மத்திய கிழக்குக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் மேற்கொண்டுள்ள உள்ள நிலையில் கத்தார் அரச குடும்பத்தினரிடமிருந்து ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார்.

இந்த விமானம் பாதுகாப்பு அச்சுறுதல்களைக் கொண்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில் டிரம்ப் அதை நிராகரித்துள்ளார்.

இந்தப் பரிசை ஏற்றுக்கொள்வதை அவர் நியாயப்படுத்தினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அப்படிப்பட்ட சலுகையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். இலவசமாக இருக்கும்போது வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நான் முட்டாளா?" அவர் தெரிவித்தார்.

பதவிக்காலம் முடிந்ததும் அவர் இந்த விமானத்தை தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்காலத்தில் இந்த விமானம் அதிபர் நூலக அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று கூறினார். 

Tags:    

Similar News