உலகம்

மோசமான டீல்: இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்க்கும் நியூசிலாந்து மந்திரி

Published On 2025-12-23 15:23 IST   |   Update On 2025-12-23 15:23:00 IST
  • இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும்.
  • பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை.

இந்தியா- நியூசிலாந்து இடையில் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA- Free Trade Agreement) ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகம் சுதந்திரமான மற்றும் நியாயமான ஒப்பந்தம் இல்லை என நியூசிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக தங்களுடைய கட்சி எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொர்பாக வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில் "வருந்தத்தக்க வகையில் இது நியூசிலாந்துக்கான மோசமான டீல். இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும். நியூசிலாந்தின் முக்கியமான பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை. விவசாயிகளிடமும் கிராமப்புற சமூகங்களிடமும் இந்த முடிவை நியாயப்படுத்துவது சாத்தியமற்றது.

நவம்பர் மாதம் நியூசிலாந்தின் பால் பொருட்கள் ஏற்றுமதி ஏறக்குறைய 13.94 பில்லியன் டாலராகும். இது நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதமாகும். இந்த ஒப்பந்தம் முக்கிய பால் பொருட்களை விலக்கும் ஒப்பந்தமாக இருக்கும் என்றார்.

மேலும், குடிபெயர்தல் விவகாரத்தில் நியூசிலாந்து நலனை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது என்றார்.

Tags:    

Similar News