உலகம்

ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவத்தை சாடிய அந்நாட்டு தலைவர்

Published On 2025-12-23 19:22 IST   |   Update On 2025-12-23 19:22:00 IST
  • ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
  • பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் நியாயப்படுத்தியது.

ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். நாங்கள் பயங்கரவாதிகளை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜமியாத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் {Jamiat Ulema-e-Islam-F (JUI-F)} தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், பாகிஸ்தான் லாஜிக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் தாக்குதலுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறுகையில் "ஆப்கானிஸ்தானில் உள்ள நம்முடைய எதிரிகள் மீது நாம் தாக்குதல் நடத்தினோம் என்று சொல்லி, அதை நியாயப்படுத்தினால், பின்னர் காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற குழுக்களின் தலைமையகம் மற்றும் பஹவல்பூர், முரித்கே போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தியதற்கு, இந்தியாவும் இதேபோன்று நியாயப்படுத்த முடியும்.

அதன்பின் நீங்கள் எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்?. எப்படி இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று நாம் குற்றம்சாட்டினோமோ, அதே குற்றச்சாட்டை தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் சுமத்துகிறது. இரண்டை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த மே மாதம் 7-ந்தேதி ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்கி அளித்தது.

Tags:    

Similar News