உலகம்
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு
- ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது.
- ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் குயின் கிரீக் நகரில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.
அந்த ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.
தகவல் அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.