செய்திகள்

வங்கதேசம் - அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு

Published On 2019-02-21 16:37 GMT   |   Update On 2019-02-21 17:31 GMT
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. #BangladeshFire
டாக்கா:

வங்கதேச தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்று சாவ்க்பஜார். இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பின் ஒரு பகுதி ரசாயனப் பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் பிடித்த தீ, பின்னர் மளமளவென பரவியது. 
 
தகவலறிந்த தீயணைப்பு படையினர் சுமார் 200 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயனப் பொருட்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்க நீண்ட நேரம் ஆனது. இந்த தீ விபத்தில் சிக்கி 69 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். #BangladeshFire
Tags:    

Similar News