செய்திகள்

அமெரிக்காவில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து வாலிபரை காப்பாற்றிய நாய்

Published On 2018-09-12 06:02 GMT   |   Update On 2018-09-12 06:02 GMT
அமெரிக்காவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 50 ஆண்டு சிறை தண்டனையில் இருந்த வாலிபர் ஒருவர் விடுதலையாக நாய் ஒன்று காரணமாக இருந்தது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஓரிகன் பகுதியை சேர்ந்தவர் ஜோசுவா ஹார்னர் (42). சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆனால் தன்மீது கூறப்பட்ட புகாரை அவர் மறுத்தார். வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 50 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

அதை எதிர்த்து அவர் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இதற்கு ஓரிகனை சேர்ந்த ஒரு தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பு உதவி புரிந்தது. இந்த வழக்கில் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிய வீட்டுக்குள் புகுந்த ஜோசுவா ஹார்னர். வீட்டின் முன்பு ‘லூசி’ என்ற தனது செல்ல நாயை சுட்டுக்கொன்றதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

ஜோசுவா ஹார்னர்

ஆனால் அந்த நாய் சாகவில்லை. வேறு ஒருவரிடம் உயிருடன் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நாயையும் அதன் புது எஜமானரையும் தீவிரமாக தேடி உயிருடன் கண்டுபிடித்தனர்.

வழக்கு விசாரணையின் போது நாய் உயிருடன் இருப்பது நிரூபிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அவர் 50 ஆண்டுகால ஜெயில் தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News