செய்திகள்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி அருகே சித்துவை அமரவைத்து வேடிக்கை பார்த்த பாகிஸ்தான் அரசு

Published On 2018-08-18 09:36 GMT   |   Update On 2018-08-18 09:36 GMT
பாகிஸ்தானில் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பஞ்சாப் மாநில மந்திரி சித்துவுக்கு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதிக்கு அருகில் இருக்கை அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவரான இம்ரான் கான் இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழாவுக்கு நெருங்கிய நண்பர்கள் உட்பட சிலரையே இம்ரான் கான் அழைத்திருந்தார். அவ்வாறு முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

தனது நண்பரின் இந்த அழைப்பை ஏற்று சித்து இன்றைய பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அப்போது மரியாதை நிமித்தமாக பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதி குவாமர் ஜாவத் பஜ்வாவை கட்டியணைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்கான விருந்தினர்களுக்கான இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் ஜனாதிபதி மசூன் கானுக்கு அருகே இந்திய மந்திரி சித்துவுக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. இதனை விமர்சித்து பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்தியாவில் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்தது தொடர்பான விவகாரம் ஐ.நா சபையில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #PakistanNewPM #NavjotSinghSidhu
Tags:    

Similar News