உலகம்

உற்பத்திக்கு தயாரான உலகின் முதல் பறக்கும் கார் - விலை எவ்வளவு தெரியுமா?

Published On 2025-12-16 16:49 IST   |   Update On 2025-12-16 16:49:00 IST
  • இந்த கார் இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff செய்ய முடியும்
  • சாதாரண கார் போல் 4 சக்கரங்களோடு சாலையில் ஓடவும் முடியும்

உலகின் முதல் பறக்கும் கார் என அறியப்படும் Alef Model A Ultralight 2 உற்பத்திக்கு தயாரானது. இறக்கை இல்லாமல் நிற்கும் இடத்திலிருந்தே takeoff செய்யவும் சாதாரண கார் போல் 4 சக்கரங்களோடு சாலையில் ஓடவும் முடியும் என்பதாலேயே உலகின் முதல் உண்மையான பறக்கும் கார் ஆக இது கருதப்படுகிறது.

இந்த பறக்கும் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கிமீ வரை சாலையில் ஓடவும் 170கிமீ வரை பறக்கவும் முடியும்.

இந்த பறக்கும் கார் குறிப்பிட்ட சிலருக்கே முதலில் வழங்கப்பட்டு மிகுந்த சோதனைக்கு பின்னர் இது பொது சந்தைக்கு வரும் என Alef Aeronautics நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் விலை சுமார் ரூ. 2.7 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News