செய்திகள்

மாடல் அழகியுடன் சுற்றிய செய்தி வெளியானதால் பதவியை இழந்த நார்வே மந்திரி

Published On 2018-08-17 13:14 GMT   |   Update On 2018-08-17 13:14 GMT
நார்வே நாட்டின் மீன்வளத்துறை மந்திரி பெர் சாண்ட்பெர்க், ஈரானின் முன்னாள் மாடல் அழகியுடன் சுற்றுலா சென்றதனால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். #Norway #PerSandberg
ஓஸ்லோ:

நார்வே நாட்டின் மீன்வளத்துறை மந்திரியும், அந்நாட்டின் ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பெர் சாண்ட்பெர்க் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். ஈரான் நாட்டின் முன்னாள் மாடல் அழகியாக இருந்தவரும், தற்போது மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பஹாரே லெட்னெஸ் என்பவருடன், பெர் சாண்ட்பெர்க் ரகசியமாக சுற்றுலா சென்றுள்ளார்.

இதனால், மந்திரியின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் என்றும், பிரதமரிடம் கூட அறிவிக்காமல் மந்திரி சென்ற இந்த ரகசிய சுற்றுலா குறித்தும் பல்வேறு சர்ச்சைகளும், கண்டனங்களும் எழுந்தன.

இந்நிலையில், இந்த சர்ச்சைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது மந்திரி பதவியை பெர் சாண்ட்பெர்க் ராஜினாமா செய்துள்ளார்.

பெர் சாண்ட்பெர்க், கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளதாகவும், இது நல்ல முடிவுதான் என்றும் நார்வே பிரதமர் எம்மா சோல்பெர்க் கருத்து தெரிவித்துள்ளார். #Norway #PerSandberg
Tags:    

Similar News