செய்திகள்

ஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி

Published On 2018-05-26 12:13 IST   |   Update On 2018-05-26 12:13:00 IST
ஏமனில் சொகோட்ரா தீவை மெகுனு என்ற புயல் தாக்கியது. இதில் இந்தியர் உள்பட 5 பேர் பலியாகினர். மேலும் 40 பேரை காணவில்லை.
துபாய்:

ஏமனில் சொகோட்ரா தீவை நேற்று மெகுனு என்ற புயல் தாக்கியது. இந்த தீவு தெற்கு ஏமனுக்கும், ஆப்பிரிக்கா கண்டத்துக்கும் இடையே அமைந்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது பயங்கரமாக காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது. இதனால் சொகோட்ரா தீவில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுகள் மூழ்கின. சொகோட்ரா தீவு பகுதியில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

புயல் தாக்குதலுக்கு 5 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் இந்தியர். மேலும் 40 பேரை காணவில்லை. அவர்கள் ஏமன், இந்தியா மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

புயல் தாக்கியுள்ள சொகோட்ரா தீவில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News