சினிமா செய்திகள்

அரிசி படத்துக்காக இளையராஜா இசையில் பாடல் பாடிய அறிவு, வேடன்

Published On 2026-01-01 21:12 IST   |   Update On 2026-01-01 21:12:00 IST
  • உணவின் பின்னணியில் உள்ள அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
  • அரிசி படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் துவங்கி, மும்முரமாக நடந்து வருகிறது.

இயக்குநர் எஸ்.ஏ.விஜயகுமார் இயக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், நடிகர் சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள படம் அரிசி.

உணவின் பின்னணியில் உள்ள அரசியலை, அழுத்தமாக பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் துவங்கி, மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், 'அரிசி' திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் பாடகர்கள் அறிவு மற்றும் வேடன் பாடல் பாடியுள்ளனர்.

Tags:    

Similar News