செய்திகள்

சொன்னதை செய்து காட்டிய டிரம்ப் - ஜெருசலேமில் தூதரகத்தை திறந்தது அமெரிக்கா

Published On 2018-05-14 19:08 IST   |   Update On 2018-05-14 19:08:00 IST
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்கா இன்று தனது தூதரகத்தை அந்நகரில் கோலாகலமாக திறந்துள்ளது. #USJerusalemEmbassy #Palestine
ஜெருசலேம்:

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலமாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அவரது இந்த அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் டிரம்பின் முக்கிய ஆலோசகரும் மருமகனுமாகிய ஜெரார்ட் குஷ்னர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை மந்திரி, உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். 



அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் 37 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 
Tags:    

Similar News