தமிழ்நாடு செய்திகள்

திருமாவளவன் கூட்டணியில் இடம் பெறுவீர்களா?- எதுவும் நடக்கலாம் என சொன்ன ராமதாஸ்

Published On 2026-01-09 12:53 IST   |   Update On 2026-01-09 12:53:00 IST
  • பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது.

திண்டிவனம்:

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று விருப்ப வேட்பு மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சியில் பங்கு வேண்டாம் என நிபந்தனை அற்ற ஆதரவை கருணாநிதிக்கு கொடுத்தோம். காங்கிரஸ்காரர்கள் ஆட்சியில் பங்கு கேட்டனர். ஆனால் ஆட்சியில் பங்கு இல்லாமல் 5 ஆண்டுகள் முழுமையாக கருணாநிதி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தோம். நான் சொன்னால் ஏன், எதற்கு என்று தட்டாமல் இருக்கும் தலைவரை நான் உடன் வைத்திருக்கிறேன். பா.ம.க. என்பது என் தலைமையிலான ஒரே அணிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நன்றாகத் தான் இருக்கிறது.

கட்சியை கைப்பற்றுவது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லாவிதமான முயற்சிகளும் எடுத்து வருகிறோம். வெற்றியும் பெறுவோம்.

கேள்வி:- நீங்கள் தான் பா.ம.க.வின் முகம் என்கிறீர்கள். ஆனால் உங்களை மீறி எடப்பாடி பழனிசாமி அன்புமணிக்கு ஆதரவளித்தது ஏன் ?

ப:- எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். இரண்டில் ஒன்றை தொடுங்கள். நான் சொல்கிறேன்.

கே:- திருமாவளவன் இருக்கக்கூடிய கூட்டணியில் நீங்கள் இணைவீர்களா?

ப:- அரசியலில் எதுவும், எப்போதும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவும் எப்போதும் நடக்காது என கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக 27 பேர் விருப்ப மனு தாக்கல் அளித்துள்ளனர். அதே போல் டாக்டர் ராமதாசின் மகள் ஸ்ரீகாந்திமதி போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். 

Tags:    

Similar News