தமிழ்நாடு செய்திகள்

என்னுடைய சக்திக்கு மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன் - குமரியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2026-02-25 10:44 IST   |   Update On 2026-02-25 10:44:00 IST
  • 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் தி.மு.க.வின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன்.
  • தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.

நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்கி உள்ளது திராவிட மாடல் அரசு.

* 50 ஆண்டுகள் தொடர் உழைப்பால் தி.மு.க.வின் தலைவர் என்ற இடத்தை அடைந்துள்ளேன்.

* தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உண்மையாக இருப்பேன்.

* சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள்.

* தமிழ்நாட்டுக்கு தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி வருவார்.

* என்னுடைய சக்திக்கு மீறி உங்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

* தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் நாங்கள் தான் என்பதை தினந்தோறும் செயல்களால் நிரூபிக்கிறோம்.

* தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உழைத்துக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News