தமிழ்நாடு செய்திகள்

குமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-25 10:34 IST   |   Update On 2026-02-25 10:34:00 IST
  • கன்னியாகுமரியில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.

நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கினார். ரூ.1,789 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* கன்னியாகுமரியில் ரூ.28.20 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கன்னியாகுமரியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.

* வளையாற்றில் இருந்து கன்னியாகுமரிக்கு நகராட்சிக்கு குடிநீர் வழங்க புதிய திட்டம்

* ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.

* முளகுமூடு தேவாலயம் ரூ.2 கோடி மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்.

* களியக்காவிளை - கன்னியாகுமரி சாலை ரூ.9 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்படும்.

Tags:    

Similar News