தமிழ்நாடு செய்திகள்
'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதி' புயலாக மாறுமா? பாலச்சந்திரன் விளக்கம்
- இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
- இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 14% அதிகம் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.