என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலச்சந்திரன்"

    • கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.
    • வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என்றார்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

    இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

    மழைப்பொழிவை பொருத்தவரை இதே நிலை நீடிக்கும். விட்டு விட்டு கனமழை பெய்யும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

    நாளை சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

    • இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
    • இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.

    இதன் காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும்போது சில இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவாக வாய்ப்பு இல்லை. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 14% அதிகம் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

    ×