தமிழ்நாடு செய்திகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
- சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
- சென்னையில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேவேளையில் இரவு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.
நேற்றிரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்த மழை காலை வரை நீடித்தது.
இந்நிலையில் மாலை 4 மணி அளவில் தேனாம்பேட்டை, வடபழனி, மயிலாப்பூர், எழும்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் வெப்பம் குறைந்து சென்னையில் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.