தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. சார்பில் மாணவர்களுக்கு விஜய் ஸ்காலர்ஷிப் திட்டம்- பிப். 28-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Published On 2025-12-21 12:08 IST   |   Update On 2025-12-21 12:08:00 IST
  • 2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை:

தமிழக வெற்றிக்கழகம் மற்றும் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து 2026- 27-ம் கல்வியாண்டுக்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது. திறமையான மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் 2026-27 கல்வியாண்டிற்கான விஜய் தகுதி ஸ்காலர்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்பட்டு உள்ளன. அதில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில், தொடர்ந்து இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு 180-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெற்ற தகுதியான மாணவர்களுக்கு 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஸ்காலர்ஷிப், உயர்கல்விக்கான ஸ்காலர்ஷிப், ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கான ஸ்காலர்ஷிப் ஆகியவையும் வழங்கப்பட்டது.

இதனைதொடர்ந்து, 2026-27-ம் ஆண்டிலும் தகுதியான மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது. திறமைகளை மேம்படுத்துவதும், நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் பின்தங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வதும் இதன் நோக்கம் ஆகும்.

2026-27-ம் ஆண்டில் ஸ்காலர்ஷிப் பெற இப்போதே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதிக்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு 100 சதவீதம் இலவச கல்வி வழங்கப்பட உள்ளது. அதாவது 10, 11, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் வரை தொடர்ந்து நல்ல மதிப்பெண்களை பெற்று, பிளஸ் 2 தேர்வில் 185-க்கும் மேல் கட்ஆப் மதிப்பெண் பெறுவதில் நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்.

தேசிய அல்லது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், சிறந்த விளையாட்டு வீரர்கள், உயர்கல்வி பெறுபவர்கள், ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் ஆகியோருக்கும் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்ப பதிவு படிவத்தை நிரப்பி, மதிப்பெண் தாள்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 28.2.2026 ஆகும். விண்ணப்பங்களை https://forms.gle/Vfvry5Wru4beQ64JA என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Tags:    

Similar News