தமிழ்நாடு செய்திகள்
ரூ.5000 கோடி மதிப்பில் சிவகங்கையில் எம்ஆர்எப் தொழிற்சாலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் #MRFfactory
- எம்ஆர்எப் தொழிற்சாலை சுமார் 340 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
- இதனால் நேரடியாக 1000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் சிப்காட்-இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில், ரூ.5,300 கோடியில் எம்ஆர்எப் நிறுவனத்தின் டயர் உற்பத்தி ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
அடுத்த 12 ஆண்டுகளில் 1,000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
சுமார் 340 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்தத் தொழிற்சாலை தமிழ்நாடு அரசின் கைடன்ஸ் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நேரடியாக ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஆர்எப் நிறுவனம் டயர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.