தமிழ்நாடு செய்திகள்

தவெக மாநாட்டிற்கு புறப்பட்ட தொண்டர்- விபத்தில் சிக்கி உயிரிழப்பு

Published On 2024-10-27 08:09 IST   |   Update On 2024-10-27 08:09:00 IST
  • பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
  • சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

மாநாட்டு திடலில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இதேபோல், சென்னையில் இருந்து ஏராளமானோர் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அதிகாலையிலேயே புறப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து தவெக மாநாட்டிற்கு புறப்பட்ட தொண்டர்கள் விபத்தில் சிக்கினர்.

சென்னை தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அவர்களது கையில் தவெக கொடி இருந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News